ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்புமனுத் தாகக்ல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ந்தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளான ஜனவரி 17 உடன் முடிவடைந்தது.
இந்த இடைத்தேர்தேலை எதிர்க்கட்சிகள் முழுமையாக புறக்கணித்துள்ள நிலையில், ஆளும் திமுக கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக சந்திரகுமார் களமிறக்கப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து, நாம் தமிழர் கட்சி மட்டுமே களமிறங்கி உள்ளது. தி.மு.க வேட்பாளராக சந்திரகுமாரும், நா.த.க வேட்பாளர் சீதாலட்சுமியும், கடைசி நாளான நேற்று தங்களது மனுக்களை தாக்கல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 56 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற 20ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.