வாஷிங்டன்: சர்ச்சையின் பிதாமகனான அமெரிக்காவின் ‘ஹிண்டன்பர்க் நிறுவனம்’ மூடப்படுவதாக திடீர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் அதானி நிறுவனம் உள்பட பல்வேறு நாடுகளின் பிரபல நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறுவதை வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு, அரசியல் பரபரப்புகளை உருவாக்கி, நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்த  ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்பவதாக அந்றுவனத்தின் தலைவரான  ஆண்டர்சன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நிறுவனர் நேட் ஆண்டர்சன் நிறுவனத்தை மூடுவதற்கு  தனிப்பட்ட காரணங்களை தெரிவித்துள்ளார்.  ஆனால் இந்த திடீர்  நடவடிக்கை நிறுவனத்தின்மீது பல்வேறு சந்தேக கோடுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனம் திட்டமிட்டே அதானி உள்பட பல நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள்மீத  திட்டமிட்டே  குற்றச்சாட்டுக்களை கூறியதா என கேள்வி எழுப்பப்பட்டு வருவதுடன்,  அது தொடர்பான  விவாதங்களை எழுப்பி உள்ளது.

பங்கு முதலீடு மோசடிகளை ஆய்வு செய்யும் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 2017ல் தொடங்கப்பட்டது. 40 வயதான நேட் ஆண்டர்சன் இதன் நிறுவனர். இந்நிறுவனம் பங்குச்சந்தையில் மோசடி செய்த பல சர்வதேச நிறுவனங்களின் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறி பல்வேறு தகவல்கள் வெளியிட்டு பிரபல நிறுவனங்களின் பெரும் நஷ்டத்துக்கு காரணமாக அமைந்து வந்தது.

இந்த நிறுவனம், , கடந்த 2023 ஜனவரியில் அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை செய்ததாகவும், குழுமத்தின் பங்குகளை செயற்கையாக உயர்த்த வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் முறையற்ற வணிக நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவும் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தன. சுமார் ரூ.12 லட்சம் கோடியை இழந்த அதானி, உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்து ஒரே இரவில் 20வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்த விவகாரம் இந்திய அரசியலிலும் கடும் சர்ச்சையை கிளப்பியது. அதானி குழுமம் இந்திய முதலீட்டாளர்களை மோசடி செய்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதானியின் முறைகேடுகளுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமும் (செபி) உதவியதாக அதன் தலைவர் மாதவி புச் மீதும் ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம்  மத்திய  பாஜ அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதை மறுத்த அதானி நிறுவனம் ஹிண்டன்பெர் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.  அதே நேரத்தில் அதானி குழுமம் வலுவான செயல்பாட்டு செயல்திறன் மற்றும் பங்குகளில் பெரும்பாலான இழப்புகளை மீட்டெடுத்ததன் மூலம் இழந்த செல்வாக்கை  மீட்டெடுத்தது

இந்த நிலையில்,  ஹிண்டன்பர்க் நிறுவனம் கலைக்கப்பட இருப்பதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் நேற்று  (ஜனவரி 16 அன்று)  திடீர் அறிவிப்பு வெளியிட்டார். அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய அதிபராக டிரம்ப் வரும் 20ந்தேதி பதவி ஏற்க உள்ள நிலையில்,  ஹிண்டன்பெர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே இந்த நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும், திட்டமிட்டே அதானி நிறுவனம் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென நிறுவனத்தை மூடுவதாக அந்நிறுவன தலைவர் அறிவித்து இருப்பது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு சில நாட்களுக்கு முன்பு  ஹிண்டன்பர்க்கை மூடுவதாக  ஆண்டர்சனின்  அறிவிப்பு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.  11 ஊழியர்களை மட்டுமே கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் ஹிண்டென்பர் நிறுவன தலைவர்,  ஆண்டர்சன்,  நிறுவனத்தை மூடுவதற்கு,  “குறிப்பிட்ட ஒரு விஷயம் கூட இல்லை – குறிப்பிட்ட அச்சுறுத்தல் இல்லை, சுகாதாரப் பிரச்சினை இல்லை, பெரிய தனிப்பட்ட பிரச்சினை இல்லை” என்று  தெரிவித்து உள்ளார்.

 நான் இப்போது ஹிண்டன்பர்க்கை என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமாகப் பார்க்கிறேன், என்னை வரையறுக்கும் ஒரு மைய விஷயமாக அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார் ஆண்டர்சன்.

ஆனால் விமர்சகர்கள் ஜார்ஜ் சோரோஸுடனான ஹிண்டன்பர்க்கின் கூறப்படும் உறவுகளை மூடுவதையும், வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தால் குறிப்பிடத்தக்க அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இந்த நிலையில், ஆண்டர்சன் எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகி உள்ளது. அதில்,   கடந்த ஆண்டு (2024)  இறுதியில் எனது குடும்பத்தினர், நண்பர்கள், சக குழுவினரிடம் ஆலோசித்தபடி ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்க முடிவு செய்துள்ளேன். எங்களது பணிகள் முடிந்ததும் நிறுவனத்தை மூட முடிவு செய்தோம். அதே போல, நிதி முதலீடு முறைகேடு தொடர்பான எங்களின் கடைசி பணி முடிந்து அறிக்கையை சமர்பித்து விட்டோம்.

இந்த முடிவு எந்த அழுத்தத்தின் காரணமாகவும், தூண்டுதல், உடல் நல பாதிப்பு காரணமாக எடுக்கப்படவில்லை. நிறுவனத்தின் மீதான அக்கறையால் வாழ்க்கையில் பல விஷயங்களை நான் இழந்திருப்பதை உணர்கிறேன். எனவே ஹிண்டன்பர்க்கை என் வாழ்க்கையில் ஒரு அத்தியாயமாக பார்க்க விரும்புகிறேன். அடுத்த 6 மாத காலம் எங்கள் நிறுவனம் எப்படியெல்லாம் ஆய்வு செய்து முறைகேடுகளை கண்டறிந்தது என்பது தொடர்பான ஆவணங்கள், வீடியோக்களை வெளியிட உள்ளேன்.

இது மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறேன். நாங்கள் மேற்கொண்ட பணியால் சுமார் 100 தனிநபர்கள் சிவில், கிரிமினல் வழக்குகளை சந்தித்துள்ளனர்.

எங்களை அசைக்க வேண்டும் என்று நினைத்த சில பெரும் பணக்காரர்களையும் நாங்கள் அசைத்தோம் என்றும் குறிப்பிட்டள்ளார்.

ஹிண்டன்பர்க் நிறுவனத்தை தொடங்கிய ஆண்டர்சன் தனக்கு உதவியாக 11 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு, பெரும் வணி நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்துள்ளார். அதானி நிறுவனம் உள்பட பல நாடுகளில் உள்ள பிரபல நிறுவனங்களின் முறைகேடுகளை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.   ஆனால்,  அவரது திடீர் மூடல் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.