சென்னை: தமிழ்நாட்டில் வரும் 18ந்தேதி திமுக சார்பில் சட்டத்துறை மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி, சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு மூத்த வழக்கறிஞர் கபில்சிவல், ஓய்வுபெற்ற தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை சார்பில் 3-வது மாநில மாநாடு வருகிற 18-ந் தேதி ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ளே செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு காலை 7மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என்றும், இதில் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்ட உள்ளது.
இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளர்களாக, மூத்த வக்கீல் கபில் சிபல் எம்.பி., முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, இந்து என்.ராம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த மாநாட்டு திடலில், அன்றைய தினம் காலை 8.45 மணிக்கு தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கொடியேற்றுகிறார். அதனை தொடர்ந்து மாநாடு தொடக்க விழா நடக்கிறது.
மாநாட்டை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்கிறார். திமுக எம்.பி. இரா.கிரி ராஜன் முன்னிலை வகிக்கிறார்.
என்.ஆர்.இளங்கோ இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக கலந்துரையாடல் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து திராவிடவியல் கருத்தரங்கு நடக்கிறது. இதில், திமுக எம்.பி. ஆ.ராசா எம்.பி., முனைவர் ஜெயரஞ்சன், பேராசிரியர் கருணானந்தன், மதிவதனி, மில்ட்டன், கவி கணேசன் ஆகியோர் பேசுகிறார்கள்.
திராவிடவியல் கருத்தரங்கிற்கு இரா.விடுதலை முன்னிலை வகிக்கிறார். சட்டத்துறை இணை செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்கிறார்.
துணை செயலாளர் கே.சந்துரு தொகுத்து வழங்குகிறார்.
‘இந்திய மக்களாகிய நாம்’ என்ற தலைப்பில் திருச்சி சிவா எம்.பி.யும் மற்றும் அருள்மொழி, சூர்யா சேவியர், தமிழ் காமராசன், இந்திரகுமார் தேரடி, மருது கணேஷ் ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.
மாலை 4.30 மணிக்கு நடைபெறும். மாநாட்டு நிறைவு விழாவிற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ தலைமை தாங்குகிறார். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னிலை வகிக்கிறார். மூத்த வக்கீல் இரா.விடுதலை வரவேற்கிறார்.
மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி. அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, துணை பொதுச் செயலாளர்கள் அந்தியூர் செல்வராஜ், கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முடிவில் சட்டத் துறை இணை செயலாளர் எஸ்.ராதாகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.
முன்னதாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் படங்களை இரா.விடுதலை, என்.ஆர்.இளங்கோ, கே.எம். தண்டபாணி, பி.ஆர். அருள்மொழி, என்.மணிராஜ் ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.
இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட செயலாளர் சிற்றரசு தயாநிதிமாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.மோகன், எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், மயிலை த.வேலு, பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.