சென்னை:  தங்கம் விலை சவரன் ரூ.59 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இது சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் நிகழ்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இதேபோல உயர்ந்த நிலையில், பின்னர் திடீரென குறைந்து சரவன் தங்கம் ரூ.56000 வந்தது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.  தற்போது தை மாதம் பிறந்துள்ள நிலையில், ஏராளமான திருமணங்கள் நடைபெறும். இந்த காலக்கட்டத்தில் தங்கம் விலை சரவன் ரூ.60ஆயிரத்தை நெருக்கி உள்ளது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்பத்தி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில்,   இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.59120க்கும் விற்பனை​ செய்யப்படுகிறது.   ஒரு கிராம்  ஆபரணத் தங்கம் ரூ.7390க்கு விற்பனையாகிறது.

நேற்று தங்கம் விலை சவரனுக்கு 10 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில்.. இன்று மீண்டும் அதிகரித்து கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் 400 ரூபாய் வரை அதிகரித்திருக்கிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.1,01,000-த்திற்கு விற்பனையாகிறது.