சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடிகளில் ஒருவரான ‘பாம்’ சரவணன் துப்பாக்கியால் சுட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் தற்போது சென்னை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தலைவரான ஆம்ஸ்ட்ராங் சென்னையில், அவரது வீடு அருகே ஒரு கும்பலால் பட்டப்பகலில் கடந்தா 2024ம் ஆண்டு வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை காவல்துறையின் செயல் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து புதிய காவல் அணையராக அருண் நியமிக்கப்பட்டு, ரவுடிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக 20க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், 3 ரவுடிகளும் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதன் காரணமாக பல ரவுடிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று தலைமறைவாகினர்.
இந்த நிலையில், பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க பாம் சரவணன் திட்டமிடலாம் என ரகசிய தகவல்கள் கிடைத்த நிலையில், அவரை தேடி வந்த காவல் துறைக்கு பாம் சரவணன் ஆந்திராவில் மறைந்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவனை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டு, முனையில் கைது செய்த காவல்துறையினர் நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காலில் காயம் அடைந்த ரவுடி பாம் சரவணனுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடி பாம் சரவணன் 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.