சென்னை: காணும்பொங்கலையொட்டி, பொதுமக்கள் வசதிக்காக நாளை கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை  மாநகர் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு வெளியிட்டு உளளது.

ஜனவரி 14ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து நாளை  நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில், சென்னை மக்கள் மற்றும் சுற்றுவட்டார மாவட்ட மக்கள், சென்னை கடற்கரை உள்பட சென்னையை சுற்றியுள்ள சுற்றுலா ஸ்தலங்களில்  தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாசெல்வது வழக்கம்.  இதனால் மெரினா கடற்கரை உள்பட பல சுற்றுலா பகுதிகள் நாளை மக்கள் கூட்டத்தால் நிரம்பு வழியும். இதையொட்டி, தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை   சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் நிலையில், சென்னை  மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நாளை (16.01.2025) பொழுதுபோக்கிற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாமல்லபுரம், கோவளம், MGM. வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் மெரினா கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் அட்டவணை பேருந்துகளுடன் கூடுதலாக 500 சிறப்பு பேருந்துகளை பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. மேலும், பயணிகளை பாதுகாப்பாக பேருந்துகளில் ஏற்றி / இறக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

நாளை காணும் பொங்கல்: சென்னை மெரினா பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்…

ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு