அகமதாபாத்
நேற்று மகர சங்கராந்தி கொண்டாத்தின் போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 4 பேர் உயிரிழந்துள்ள்ள்னர்.
நேற்று வடமாநிலங்களில் பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தி, உத்தராயண் பண்டிகை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு கொண்டாடப்பட்டுள்ளது.. குஜராத்தில் உத்தராயண் என்ற பெயரில் கொண்டாடப்படும் இந்நாளில் மக்கள் வானில் பட்டம் விட்டு கொண்டாடுவது வழக்கம்.
உத்தராயண் பண்டிகையையொட்டி குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் வண்ணவண்ண பட்டமிட்டு மகிழ்ந்தனர். குஜராத்தில் உத்தராயண் பண்டிகையின்போது பட்டத்தின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து நேற்று ஒரேநாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
பஞ்ச்மகால் மாவட்டம் ஹலோல் நகரில் குர்னால் பர்மர் (வயது 4) என்ற சிறுவன் தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது பட்டத்தின் மாஞ்சா நூல் சிறுவன் குர்னாலின் கழுத்தை அறுத்ததில் அச்சிறுவன் உயிரிழந்தான். இதை போல் 3 பேர் உயிரிழந்துள்ள்னர்.
அவர்களில் மஹாசனா மாவட்டம் வட்பார் பகுதியை சேர்ந்த மன்சாஜி (வயது 35) நேற்று காலை பைக்கில் தனது தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, பட்டத்தின் மாஞ்சா நூல் அவரின் கழுத்தை அறுத்துபடுகாயமடைந்துஅருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
Gujarat, Kite String, neck cut, 4 died,