சென்னை: சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
புகழ்பெற்ற சாகித்ய அகாடாமி விருதுகளை தமிழ்நாட்டைச்சேர்ந்த பல எழுத்தாளர்கள் பெற்று வருகின்றனர். கடந்த 2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களின் பட்டியலிலி, வரலாற்றுப் பேராசிரியர், எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதுடன் 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.
ஆ.இரா.வேங்கடாசலபதி தமிழகத்தின் ஆய்வாளர்களுள் ஒருவர். இவர், புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாடடுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற விருதாளர்களை கவுரவிக்கும் வகையில், விருது பெற்ற 10 விருதாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்.