டெல்லி

ந்தியா சார்பில் டிரம்ப் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார்.

வரும் 20ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக பதவியேற்க உள்ளார்.  அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த விழாவில் பதவிக்காலம் முடிவடையும் அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு அதிகாரத்தை அவரிடம் ஒப்படைப்பார். டிரமொ பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு உரையாற்றுவார். விழாவில் பல நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

டிரம்ப் – வான்ஸ் பதவியேற்பு குழுவின் அழைப்பின் பேரில், இந்தியா சார்பில், மத்திய வெளியுறவுத்துறை அமைசர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. விழா முடிந்ததும், புது நிர்வாகத்தினரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஜெய்சங்கர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.