ரோடு

ரும் 17 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி சி சந்திரகுமார் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு எம் எல் ஏ ஆன திருமகன் ஈ.வெ.ரா. உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதையொட்டி நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.

சமீபத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதையடுத்து 4 ஆண்டுகளில் 2 ஆவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த 1௦-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டபடி தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தே.மு.தி.க. மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை.

பொங்கல் அன்று நாம் தமிழர் கட்சிக்கான வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வரும் 17 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.