சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, பி.எம்.எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பும்போது கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப் படியை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், போக்குவரத்துத்துறையில் வரவுக்கும் செலவுக்கும் இடையில் ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவ்வபோது போராடி வருகின்றனர். தற்போதும் சென்னையில் உள்ள போக்குவரத்து அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 625 ம், 151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ₹195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ₹85 ஊக்கத்தொகையாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 2024ம் ஆண்டுக்கான சாதனை ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் நற்பணியினை கருத்திற்கொண்டும், உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் தொழில் அமைதி ஆகியவற்றில் ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு குறிப்பிட்டதொரு தொகையை சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.
அவ்வாறே 2024-ஆம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத்தொகை (Performance Incentive) அரசு போக்குவரத்து கழகங்கங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு வழங்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத் தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
151முதல் 200 நாட்கள் வரை பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195-ம், 91 முதல் 151 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.85 ஊக்கத்தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள் சாதனை ஊக்கத்தொகை பெற இயலாது. போக்குவரத்து கழகத்தில் ஆங்கில ஆண்டின் கடைசி நாளன்று ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் அரசு போக்குவரத்துக் கழகங்களின் ஊழியர்களுக்கு கீழ்கண்டவாறு வழங்க அரசு இதன் வழி ஆணையிடுகிறது.
அ) 2024-ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625/-
ஆ) 2024-ம் ஆண்டில் 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 200 நாட்களுக்குக் குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195/-
இ)2024-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாகவும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85/-
ஈ) 2024-ம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்குக் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு இல்லை.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.