சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மத்திய அரசுக்கே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய சட்டசபை 5 ஆவது நாள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி,
”சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தப்போவது இல்லை. ஆகவே மாநில அரசு அதனை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்
எனக் கோரிக்கை விடுதார்..
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது. பீகாரில் மாநில அரசு ஆய்வு நடத்தினார்கள். அதன் நிலை என்ன ஆனது?. இருப்பினும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம்”
என்று இதற்கு பதிலளித்துள்ளார்.