ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளது.
மூத்த காங்கிரஸ் உறுப்பினரும், எம்எல்ஏவுமான இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இன்று ஜனவரி 10ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி உள்ளது. இதையடுத்து, சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. அதனால், அடுத்த வேட்புமனு தாக்கல் ஜனவரி 11ந்தேதி (திங்கட்கிழமை) ஆகும். அதைத்தொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. அதன்படி, ஜனவரி 14, 15, 16 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாகும். இதையடுத்து ஜனவரி 17ந்தேதி (வெள்ளிக்கிழமை) மட்டுமே உள்ளது. அன்றே வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இதன் காரணமாக, தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் வேட்பாளடர்கள் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்று வேட்புமனு தாக்கல் செய்யாவிட்டால், அடுத்து திங்கட்கிழமை போகி பண்டிகை அன்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல் இறுதிநாள்தான் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியும்.
இதையடுத்து, வேட்புமனு பரிசீலனை ஜனவரி 18ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ந்தேதி (திங்கட்கிழமை) என அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்றுமாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.