டெல்லி

வரும் 13 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துக் கொள்கிறார்/.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 5 aamதேதி 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறிவதால் இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். 18-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் 20-ந்தேதி ஆகும்.

தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ந்தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் டெல்லியில் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன. ஆம் ஆத்மி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து காங்கிரஸுடன் கூட்டணி இல்லை, தனித்துப் போட்டி எனவும் தெரிவித்தது.

காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வரும் 13 ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ.25 லட்சம் மருத்துவக்காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.