சென்னை

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு  விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

பௌர்ணமி தினங்களில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். அதன்படி வருகிற 13ம் தேதி பவுர்ணமி தினத்தையோட்டி ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.  இதைப் போல் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“பௌர்ணமி கிரிவலத்தையொட்டி வருகிற 13 ஆம் தேதி காலை 9.25 மணிக்கு (ரயில் எண் 06130) விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து அதே நாள் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரம் புறப்படும் ”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.