சென்னை
அம்பத்தூர் அருகே ஒரு சொகுசு கார் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
நேற்று சென்னை கோயம்பேட்டில் இருந்து முகப்பேறு நோக்கி சொகுசு காரில் சென்று கொண்டிருந்த நபர், அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் சிக்னல் அருகே காரை நிறுத்திவிட்டு, டீ குடிப்பதற்காக சென்றுள்ளார்.
அந்த கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இந்த சம்பவத்தில் காயம் ஏற்படவில்லை.
அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென நடுரோட்டில் வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.