சென்னை
தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையகா கண்டிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு,
”சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுகவினரே காரணம். ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது.
ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை தமிழ்நாடு சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது. தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என கோரிக்கை வைக்க ஆளுநருக்கு உரிமை இல்லை.
ஆளுநர் உரையின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் வெட்டி, ஒட்ட முயற்சி நடந்தது; வெட்டி, ஒட்டுவார்கள் என முன்கூட்டியே கண்டுபிடித்ததால் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை தரப்படவில்லை. தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நேரலை கொடுக்க ஆளுநர் தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்து விட்டார்.”
எனத் தெரிவித்துள்ளார்.