டெல்லி
தமிழகத்தை சேர்ந்த 82 வயது மூதாட்டி பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த கிட்டம்மாள் என்னும் 82 வயது மூதாட்டி தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு கிட்டம்மாள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றுள்ளார்,.
தற்போது டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’) சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்த தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது மூதாட்டி கிட்டம்மாள், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..
இந்த பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மூதாட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Patrikai.com official YouTube Channel