திருப்பதி
வரும் 7 ஆம் தேதி அன்று திருப்பதி கோவிலில் உள்ளூர் மக்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
”ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை அன்று உள்ளூர் மக்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்படி இந்த மாதத்துக்கான சாமி தரிசன அனுமதி 7-ந்தேதி நடக்கிறது.
அதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) உள்ளூர் மக்களுக்கு சாமி தரிசன டோக்கன்கள் திருப்பதி மகதி கலை அரங்கத்தில் உள்ள கவுண்ட்டர்களிலும், திருமலையில் உள்ள பாலாஜி நகர் சமுதாயக் கூடத்திலும் வழங்கப்படுகிறது.
எனக் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel