சென்னை
இயக்குநர் பாலாவின் வணங்கான் பட ரிலீஸ் தேதி மாற்றப்பட உள்ளதாக தகவ்லகள் வந்துள்ளனா.
அருண் விஜய் நடிப்பில்இயக்குனர் பாலாவினியக்கத்தில் உருவான ‘வணங்கான்’ படத்தில் அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், சாயா தேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார்.
அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகையில் ‘விடாமுயற்சி, கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாக உள்ளன. அதனால், வணங்கான் படத்திற்கு திரைகளில் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்ய உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.