அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் Embraer E190AR ஜெட் பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானது.

67 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 72 பேருடன் பாகுவிலிருந்து க்ரோஸ்னிக் சென்ற இந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அக்டாவ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.

க்ரோஸ்னிக் சென்று கொண்டிருந்த இந்த விமானம் முதலில் மகச்சலாவிற்கும் பின்னர் அக்டாவிற்கும் திருப்பி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அக்டாவ் விமான நிலையம் அருகே சிறிது நேரம் வானத்தில் வட்டமடித்த இந்த விமானத்தை அப்பகுதி மக்கள் பலரும் நேரில் பார்த்தனர்.

இதையடுத்து விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து 27 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எஞ்சியவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.