55-வது GST கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருளுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய கார்களை விற்பனை செய்யும் போது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யில் செய்யப்பட்டுள்ள மாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காரின் மதிப்பில் உள்ள வித்தியாச தொகைக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ள நிலையில் சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரஷாந்த் பூஷன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “சீதாராமன் கூறுகையில், உங்கள் பழைய காரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைக்கு இடையே உள்ள வித்தியாசத்தில் மட்டும் 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்.

உங்கள் காரை 10 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்ச ரூபாய்க்கு வாங்கி, இன்று 1 லட்ச ரூபாய்க்கு விற்க முடிந்தால், வித்தியாச தொகையான 9 லட்ச ரூபாய்க்கு நீங்கள் 18% ஜி.எஸ்.டி.செலுத்த வேண்டும்.
அதாவது 1 லட்ச ரூபாய்க்கு விற்பனையான காருக்கு ரூ. 1,62,000 ஜிஎஸ்டி செலுத்துகிறீர்கள்! எனவே இந்த ஜிஎஸ்டியை செலுத்த உங்கள் உடைகளை விற்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்.