சென்னை: வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, பாமக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்ற நிலையில்,  காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பங்கேற்றார்.

தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 24ம் தேதியுடன், 1,000 நாட்கள் ஆகின்றன. கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதியின் அடிப்படை. இல்லாத காரணங்களை கூறி, ஓர் அரசு மறுக்கிறது என்றால், அந்த அரசை நடத்துபவர்கள், வன்னியர்கள் மீது எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருப்பர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
எனவே, வரும் 24 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு, வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து மாவட்ட, தாலுகா தலைநகரங்களிலும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. காஞ்சிபுரத்தில் நடக்கும் போராட்டத்தில் அன்புமணி பங்கேற்பார் என ஏற்கனவே பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி, திமுக அரசு பதவிக்கு வராதவாறு வீடுவீடாக சென்று  பிரசாரம் மேற்கொள்வோம் என்று கூறினார்.

அதன்படி, இன்று காலை .  தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் (பாமக) வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தினர்.

விழுப்புரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த போராட்டத்தில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பியும்,  திமுக அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேனர் கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.