டாக்கா’
வங்கதேச அரசு ஷேக் ஹசினாவை திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுமார் 16 ஆண்டுகல் வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின்து அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடந்து வந்தது. மாணவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்ததால் ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவரது அரசு கவிழ்க்கப்பட்டது. வேறெந்த நாட்டிலும் புகலிடம் கிடைக்காததால், ஷேக் ஹசீனா 4 மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் தங்கி இருக்கிறார்.
முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் பதவியேற்ற இடைக்கால அரசு ஷேக் ஹசீனா, அவருடைய மந்திரிகள், ஆலோசகர்கள், ராணுவ, சிவில் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்குகளும், இனப்படுகொலை குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. ஷேக் ஹசீனா உள்ளிட்டோருக்கு எதிராக டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரண்டுகளை பிறப்பித்துள்ளது.
இந்த, வழக்குகளை சந்திக்க ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து வரவழைக்க ஏற்பாடு செய்யுமாறு வங்கதேச வெளியுறவு அமைச்சகத்துக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் வங்காளதேச இடைக்கால அரசு, வழக்குகளை சந்திக்க ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்புமாறு இந்தியாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.