வாஷிங்டன்
சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் என்னும் தமிழர் அமெரிக்காவின் ஏ ஐ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடந்து முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், தனது அரசில் பணியாற்றுபவர்களை தேர்வு செய்யும் பணியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் தொழிலதிபர்கள் எலான் மஸ்க் உள்ளிட்ட பலருக்கு தங்களின் அரசின் முக்கிய பொறுப்புகளை வழங்கியதில் விவேக் ராமசாமி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் டிரம்ப்பின் அரசு நிர்வாகத்தில் இடம்பிடித்துள்ளனர்.
தற்போது, சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை, வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) தொடர்பான அறிவியல் தொழில்நுட்ப முதுநிலை ஆலோசகராக டிரம்ப் நியமனம் செய்துள்ளார் இவர் மைக்ரோசாப்ட், டிவிட்டர், யாகூ, பேஸ்புக் நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
சென்னை காட்டாங்கொளத்துாரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன், அரசின் ஏ.ஐ., கொள்கையை வடிவமைக்க இருக்கும் இவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவிலும் இடம்பெற்றுள்ளார்.