டெல்லி

பிரதமர் மோடி அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று மாரடைப்பால் காலமான இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) முன்னாள் துணை பிரதமரும், அரியானா மாநில முன்னாள் முதல்வர் தேவிலாலின் மகன்களில் ஒருவர் ஆவார்

கடந்த 1989 முதல் 2005 வரை 4 முறை அரியானா முதல்வராக பதவி வகித்த ஓம் பிரகாஷ் ச்வுதாலாவின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்,

 “அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக இருந்தார் மற்றும் சவுத்ரி தேவிலாலின் பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றவர். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.”

என்று பதிவிட்டுள்ளார்.