சென்னை:  துறைமுகம் பகுதியில் ரிவர்ஸ் எடுக்கும் போது காருடன் கடலுக்குள் விழுந்த  விபத்தில்  ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டாவை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் கார் ஓட்டுநர் முகமது ஷாகி வந்துள்ளார். ஓட்டுநர் காரை இயக்கியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கடலுக்குள் விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தையது. இதை அறிந்த துறைமுக ஊழியர்கள் அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர்.

இதற்குள் காருக்குள் சிக்கிய கடலோர காவல்படை அதிகாரி ஜொகேந்திர காண்டா, கார் கண்ணாடியை உடைத்துக் கொண்டு நீதி வெயே வந்தார். அவரை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காரையும், டிரைவரையும் தேடும் பணி நடைபெற்றது.

இதில், கார் சுமார் 85 அடி ஆழத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், காரினுள் டிரைவர் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து, டிரைவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முகமது ஷாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உடல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.