புதோ

சூறாவளி தாக்குதலில் மொசாம்பிக்கில் 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிடோ என பெயரிடப்பட்ட சூறாவளி மொசாம்பிக் நாட்டின் பல பகுதிகளை கடுமையாக தாக்கி நியாஸ்சா, கபோ டெல்கடோ உள்ளிட்ட 3 மாகாணங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த சூறாவளியின் போது மணிக்கு 160 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசியது.

கடந்த ஞாயிற்று கிழமையன்று, கபோ டெல்கடோ மாகாணத்தில் உள்ள மெகுபி மாவட்டத்தில் சூறாவளி கரையை கடந்தது. தொடர்ந்து, திங்கட்கிழமையும் சூறாவளி தாக்கம் இருந்தது. கனமழை மற்றும் பலத்த காற்று வீசியதில் வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன.

சூறாவளி பாதிப்பால் இதுவரை 34 பேர் உயிரிழந்து 319 பேர் காயமடைந்து உள்ளனர். மேலும், 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.   இதை அந்நாட்டின் தேசிய பேரிடர் ஆபத்து மேலாண்மை மற்றும் குறைப்புக்கான தலைவர் லூயிசா மெக் கூறியுள்ளார்.

இந்த சூறாவளியால் இதுவரை 23,600 வீடுகள் மற்றும் 170 மீன்பிடி படகுகள் சேதமடைந்து உள்ளன. இந்த சூறாவளியால் ஜிம்பாப்வே நாடும் பாதிக்கப்பட கூடும் என கூறப்படுகிறது. அந்நாடு இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.