டெல்லி: அம்பேகர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் படத்துடன் எதிர்க்கட்சிகள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று அவர் கூறினார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். , அமித் ஷா, மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜகவும் பாபா சாகேப் அம்பேத்கரை எவ்வளவு வெறுக்கிறார்கள் என்பது தெரிகிறது என விமர்சித்து வருகின்றனர். . பாஜகவும், பிரதமரும், உள்துறை அமைச்சரும் அம்பேத்கரை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கிடையில், மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித் ஷாவின் கருத்து குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை தாக்கல் செய்தார்.
தாகூர் தனது ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில், அமித் ஷா பி ஆர் அம்பேத்கரின் பாரம்பரியத்தை அவமதித்ததாகவும், “மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும்” குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை அவைகள் கூடியதும், அம்பேத்கர் பற்றிய ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை முடங்கியது இதையடுத்து அவைத்தலைவர்கள் அவைகளை மதியம் 2ணி வரைஒத்தி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். . எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.