தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் நிலையில் தனது இந்த ஓய்வை அவர் அறிவித்துள்ளார்.

இந்த தொடரில் அடிலெய்டில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிய அஸ்வின் அந்த போட்டியில் 53 ரன்களுக்கு 1 விக்கெட்டை எடுத்தார்.

106 டெஸ்டில் 24 சராசரியில் 537 விக்கெட்டுகளுடன், 132 டெஸ்டில் 619 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் இந்தியாவின் அதிக விக்கெட் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.