சென்னை: பொங்கலுக்கு 1.77கோடி பேர்களுக்கு இலவச வேட்டி- சேலை வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காலதாமதமின்றி ஜனவரி 10 ஆம் தேதிக்குள் இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ள தமிழக கைத்தறி துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி,  ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் காந்தி, வரும் தைபொங்கலுக்கு 1.77 கோடி வேட்டி மற்றும் 1.77 கோடி சேலைகள் வழங்க இருக்கிறோம். கடந்த ஆண்டு மக்களவை தேர்தல் வந்ததால் வேட்டி, சேலை வழங்குவதில் சற்று காலதாமதமானது. ஆனால் இந்த ஆண்டு அது போல நடக்காது என்றவர், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.

இலவச வேட்டி சேலைகள்,  இந்த மாதம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கப்படும்.  அவர்கள், அதை  நியாய விலை கடைகளுக்கு அனுப்பி வைத்து, ரேசன் அட்டை தாரர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விலையில்லா வேட்டி மற்றும் சேலைகளை குறித்து பலர் குறைகளை கூறினார்கள். ஆனால்,  இந்த முறை,  தைப்பொங்கலை ஒட்டி வழங்கப்படும் வேட்டிகள் மற்றும் சேலைகள் தரமாகவும், பல்வேறு ரகங்களில் வழங்கப்பட உள்ளது.  நாங்கள் அவற்றை பரிசோதனை செய்து தான் பொது மக்களுக்கு வழங்குகிறோம் என்றவர், இந்த வேஷ்டி சேலைகள்,   வரும் ஜனவரி 10 ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணி நிறைவடையும் என்றார்.

இந்தமுறை சேலைகள் மட்டும் 15 ரகங்களில் வழங்க உள்ளோம் மற்றும் 5 ரகங்களில் வேட்டிகளையும் வழங்க உள்ளோம் என்றார். அனைத்தும் தரமானதாக இருக்கும் என்றார். திமுக ஆட்சியை போல் எந்த ஆட்சியிலும் விலையில்லா வேட்டி, சேலைகள் தரமாக வழங்கவில்லை என்றார்கள். அதற்கு சரியான விளக்கம் அளித்த பிறகு எதிர்க்கட்சியினர் கூட தற்போது கேள்வி கேட்பதில்லை என்றார்.