ஜார்ஜியா முன்னாள் கால்பந்து வீரர் மைக்கேல் கவெலஷ்விலி அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பு தெரிவித்தும் ஜார்ஜியாவில் கடந்த இரண்டு வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போதைய அதிபரும் மேற்கத்திய ஆதரவாளருமான சலோமி ஸூரபிச்விலி பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய உள்ளது.
இந்த நிலையில் 225 உறுப்பினர்கள் கொண்ட ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் 224 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததை அடுத்து 53 வயதாகும் மைக்கேல் கவெலஷ்விலி புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலில் மைக்கேல் கவெலஷ்விலி தவிர வேறு யாரும் போட்டியிட வில்லை என்ற நிலையில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட ஆளும் ஜாா்ஜிய கனவுக் கட்சியின் மைக்கேல் கவெலஷ்விலி அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளது சர்வாதிகாரத்தின் எடுத்துக்காட்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.