டெல்லி:  காந்திய வழியில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது பலபிரயோகம் கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்தி உள்ளது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு விவசாயிகளை சமாதானம் செய்து அவர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற செய்யவோ அல்லது இடம் மாற்றவோ செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

பஞ்சாப்-ஹரியானா எல்லையில்  விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அவர்கள் மாநிலத்திற்குள் நுழையாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டு தடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் குழு ஆய்வு உச்சநீதிமன்றம் ஆய்வு குழு அத்துள்ள நிலையில்,  இந்த குழுவினர் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமாதானம் செய்து அவர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற செய்யவோ அல்லது இடம் மாற்றவோ செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜால் புயான் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  விவசாயிகள் வன்முறை வழியில் போராடக்கூடாது என  கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், “காந்திய தத்துவத்தின் வழியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அரசியலமைப்பு சட்ட ரீதியாக உரிமை உள்ளது. அவ்வாறு போராடும் விவசாயிகள் மீது  எந்தவிதத்திலும் பலபிரயோகம் கூடாது என்பதுதான் எங்களின் பரிந்துரை.

மத்தியஅரசு, பஞ்சாப் அரசின் பிரதிநிதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள ஜக்ஜித் சிங் தலேவாலை சந்தித்து மருத்துவ உதவி அளிக்க வேண்டும். அவரது போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அவரது உயிரை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அதுதான் முதன்மையானது

நீதிமன்றத்தின் முதன்மையான பணி என்பது விவசாயிகளை சமாதானப்படுத்தி அவர்களை வேறு இடத்தில் போராடும் படி கூற வேண்டும். அல்லது அவர்களது போராட்டத்தை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

விவசாயிகள் போராட்ட விஷயத்தில்,  நடைமுறைப்படுத்த முடியாத ஒரு உத்தரவு பிறப்பிக்க விருப்பமில்லை என்று பெஞ்ச் தெளிவுபடுத்தியது. மத்திய மற்றும் பஞ்சாப் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தலேவாலை அவசரமாக சந்தித்து, மருத்துவ உதவிகளை வழங்கி, அவரது வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி அவரை சமாதானப்படுத்துமாறு பெஞ்ச் அறிவுறுத்தியது. அவரது உயிரைப் பாதுகாப்பது முக்கியம் என்றும், அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்களுக்கு எதிராக  பலப்பிரயோகத்தை தவிர்க்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் குர்மிந்தர் சிங் ஆகியோரை பெஞ்ச் கேட்டுக் கொண்டது.

போராட்டக்காரக்ரள்,  தமனி கானௌரி-ஷம்பு உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டதால், மாநிலத்திற்கு பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக சிங் தெரிவித்தார்.

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தி நவம்பர் 26ஆம் தேதி முதல் அவர் போராட்டம் நடத்தி வருகிறார். பஞ்சாப் அரசு, மத்திய அரசு சார்பில் அவருக்கு 24 மணி நேர மருத்துவ உதவி அளிக்க வேண்டும். அவருடன் மற்றும் இதர விவசாயசங்கங்களின் தலைவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலுக்கட்டாயப்படுத்தக் கூடாது, அவரது உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்,”என்று உ்த்தரவிட்டனர்.

ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நவாப் சிங் தலைமையில் நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.