அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அடுத்த மாதம் பதவிவிலக உள்ள நிலையில் ஒரேநாளில் அதிகபட்சமாக 1500 பேரின் தண்டனையை மாற்றியுள்ளார்.

இதற்கு முன் 2017ம் ஆண்டு அப்போதைய அதிபர் பராக் ஒபாமா 330 பேரின் தண்டனையை மாற்றியமைத்ததே ஒரே நாளில் மாற்றியமைக்கப்பட்ட அதிகபட்ச தீர்ப்பாக இருந்தது.

கொரோனா பரவல் அதிகரித்த போது சிறைக் கைதிகளுக்கு தொற்று பரவாமல் இருக்க அமெரிக்க சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

தற்போது இவர்களை வீட்டுக்காவலில் இருந்து மீண்டும் சிறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

தவிர, வன்முறை போதைப்பொருள் போன்ற குற்றங்களில் தண்டனை பெறாத சிறுகுற்றங்களில் தண்டனை பெற்ற 39 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஏற்கனவே, துப்பாக்கி மற்றும் வரிக் குற்றங்களுக்காக தொடரப்பட்ட வழக்கில் இருந்து தனது மகன் ஹன்டருக்கு அதிபர் ஜோ பைடன் மன்னிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.