வெம்பக்கோட்டை
வெம்பக்கோட்டையில் நடந்து வரும் அகழாய்வில் சுடுமண் ஆபரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3 ஆம் கட்ட அகழாய்வு பணியில் இதுவரை 16 குழிகள் தோண்டப்பட்டு உள்ளன.
இந்த குழிகளில் ஏராளமான சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மைகள், செப்புக்காசுகள், வேட்டைக்கு பயன்படுத்திய பழங்கால கருவிகள் உள்பட 2,700-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
நேற்று, அகழாய்வில் பெண்கள் அணியக்கூடிய சுடுமண்ணால் ஆன ஆபரணம் மற்றும் நீல நிற கண்ணாடி மணியும் கிடைத்தது. முற்காலத்தில் வேலைபாடுகளுடன் கூடிய ஆபரணங்கள் செய்ய இது போன்ற மணிகளை பயன்படுத்தி இருக்கலாம் என அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் கூறியுள்ளார்.