சென்னை: இன்று முற்பகல் சென்னை உள்பட 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், இன்று 28 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட 16 மாவட்டங்களில் இன்று (டிச.12) நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது.

இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியானது  மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், சென்னை உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று முற்பகல்,  தமிழகத்தின் 33 மாவட்டங்களில்  மிதமானது தல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும். இதுதவிர அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதனைதொடர்ந்து கனமழை காரணமாக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார். மேலும் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். 6 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று ஆங்கிலத்தேர்வு நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.

கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் பள்ளி. கல்லூரிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

திருவாரூர், இராமநாதபுரம் விடுமுறை.

திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

தொடர் மழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

நெல்லை மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை.

  • சென்னை
  • விழுப்புரம்
  • மயிலாடுதுறை
  •  தஞ்சாவூர்
  •  புதுக்கோட்டை
  • ⁠கடலூர்
  • திண்டுக்கல்
  • ராமநாதபுரம்
  • திருவாரூர்
  • காஞ்சிபுரம்
  • செங்கல்பட்டு
  • அரியலூர்
  • ராணிப்பேட்டை
  • திருவள்ளூர்
  • கரூர்
  • தூத்துக்குடி
  • திருப்புத்தூர்
  • வேலூர்
  •  நெல்லை (1 – 5ஆம் வகுப்புகளுக்கு மட்டும்)
  • திருண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

– புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

– திருவள்ளூர் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு