டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் பாராளுமன்றம் முடக்கம் உள்பட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், அதானி விவாகரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் இரு அவைகளையும் முடக்கி வருகின்றன. மேலும், உ.பி. சம்பல் பகுதியில் மசூதி ஆய்வின்போது ஏற்பட்ட வன்முறை ஆகிய விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்தியஅரசு முடிவு செய்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அதை நிறைவேற்ற முடியாத வகையில் அவையை முடக்கி வருகின்றன.
இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிற்பகல் 1 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.