கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக பிரிவு 498A தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.

நீதிபதி பி.வி. நாகரத்னா மற்றும் நீதிபதி என்.கோடேஷ்வர் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், குடும்ப வன்முறை மற்றும் துன்புறுத்தலில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் இந்த விதியை, சில பெண்கள் தங்கள் கணவனையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இணங்க நிர்பந்திக்க சில சமயங்களில் பயன்படுத்துகின்றனர் என்று கூறியுள்ளனர்.

சில பெண்கள் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கலுக்கான கருவியாக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 498ஏ-வை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

498A பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்றம் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் தங்களுக்கு எதிராக 498A தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கை தெலுங்கானா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.