போபால்: பள்ளி முதல்வரை பிளஸ்2 படிக்கும் மாணவர் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய உள்ளது. இந்த பதபதைக்கும் சம்பவம் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூரில் உள்ள அரசு பாடசாலையின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுரேந்திர குமார் சக்சேனா (55). இவரை 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். சத்தம் கேட்டு பாடசாலை ஊழியர்கள் பதறியடித்து ஓடிவந்தனர்.
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள தாமோரா அரசுப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தவர் எஸ்கே. சக்சேனா ( வயது55). இவர் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றபோது, அங்கு பயிலும் 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இந்த சம்பவத்தில் சக்சேனாவின் தலையில் குண்டு காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இந்த சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள், மணாவர்கள் என பலரும் அங்கு ஓடிவந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட அந்த மாணவன் தனது கூட்டாளியுடன் இருசக்கர வாகனத்திலேயே அங்கிருந்து தப்பிச் சென்றான்.
விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரது கூட்டாளியும் அதே பள்ளியில் பயிலும் மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பலியான சக்சேனா கடந்த 5 ஆண்டுகளாக தாமோரா பள்ளியின் முதல்வராக பணிபுரிந்து வந்திருக் கிறார். பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன், பள்ளிமுதல்வரின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிய நிலையில், அவனை காவல்துறையினர் உத்தரபிரதேச எல்லைக்கு அருகில் கைது செய்துள்ளனர். அவனிடம் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை போலீசார் மீட்டனர்.
இந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.