டெல்லி: சிரியாவில் ஏற்பட்டுள்ள மோசமான நிலையை கருத்தில் கொண்டு அங்கு உள்ள இந்தியர்கள், உடனே நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை நள்ளிரவில் அவசரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிரியாவின் நிலைமை  நாளுக்கு நாள் மோசமாகி வருவது குறித்து,  அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி  குறித்து,  மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டது.  இதைத்தொடர்ந்து,  சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள், பணி நிமித்தமாக அங்கிருக்கும் இந்தியவர்கள் தங்களது உடைகளை எடுத்துக்கொண்டு,  விரைவில் கிடைக்கக்கூடிய வணிக விமானங்கள் மூலம்  சிரியா  விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்து உள்ளது.

தற்போது சிரியாவில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அவ்வாறு வெளியேற.” முடியாதவர்கள், தங்களின்  பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி,  , அவர்களின் இயக்கங்களை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்தவும்” அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 டமாஸ்கஸில் உள்ள இந்தியத் தூதரகத்துக்காகப் பகிரப்பட்ட அவசர உதவி எண். இது +963 993385973. இதே இலக்கத்தை வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்தலாம். மேலும், அவசர மின்னஞ்சல் முகவரியாக hoc.damascus@mea.gov.in என பகிர்ந்துள்ளனர்.

சிரியா தற்போது ஒரு அரசியல் நெருக்கடியின் மத்தியில் உள்ளது, ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பஷர் அல்-அசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. அடுத்த இலக்கு டமாஸ்கஸ் ஜனாதிபதி அசாத் ஆட்சியை வெளியேற்றும் முடிவுடன் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது கிளர்ச்சியாளர்கள் படை. மட்டுமின்றி, சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களின் அடுத்த இலக்கு டமாஸ்கஸ் என்றே கூறப்படுகிறது. மேலும், ஒரு தோட்டாக்கள் கூட சுடப்படாமல் பல சிரியா நகரங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளது.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ மற்றும் முக்கிய நகரமான ஹமா ஆகியவை ஏற்கனவே ஜனாதிபதி அசாத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வீழ்ந்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக அசாத் குடும்பமே சிரியாவை ஆண்டு வருகிறது. ஆனால் முதன்முறையாக, அது ஒரு முழுமையான வீழ்ச்சிக்கு உண்மையிலேயே தயாரான நிலையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்தே அங்கிருந்து இந்தியர்கள் வெளியேற இந்திய அரசு அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.