தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.
இன்று (டிச. 3) செவ்வாயன்று இரவு தென் கொரிய மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோல் ஆற்றிய உரையில் இதனை தெரிவித்தார்.
மேலும் “ராணுவ அவசர சட்டம்” (Martial Law) அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் வெட்கமற்ற முறையில் வட கொரியாவுக்கு அனுதாபம் காட்டுவதாகவும், அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் அரசாங்கத்தை முடக்குவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து ராணுவம் செயலில் இறங்கியுள்ளதாவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தென் கொரியாவில் இதுவரை 16 முறை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது இருந்தபோதும் 1980க்குப் பிறகு அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.