டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மன்மோகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், நீதிபதி மன்மோகனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற கொலிஜியம் நீதிபதி மன்மோகன் பதவி உயர்வு குறித்து கடந்த நவம்பர் 28 ம் தேதி அறிவித்திருந்த நிலையில் இந்த பரிந்துரை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதி பதவிகள் உள்ள நிலையில் தற்போது 32 நீதிபதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.