அமெரிக்காவை சுரண்டி வாழும் கனடா அமெரிக்காவின் 51-வது மாநிலமாக சேரலாம் என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் வர்த்தக வரியை உயர்த்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு கனடா மீது அமெரிக்கா 25% வரி விதித்தால் எங்களின் பொருளாதாரம் அழிந்துவிடும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

ஜஸ்டின் ட்ரூடோ-வின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய டொனால்ட் டிரம்ப் “ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலரை சுரண்டாமல் கனடாவால் வாழமுடியாது என்றால், அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா சேரலாம்;

அதன் ஆளுநராக ஜஸ்டின் ட்ரூடோ இருக்கலாம்” என்று ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கிண்டலாக கூறியுள்ளார்.