பெங்களூரு மற்றும் கர்நாடகாவில் சில பகுதிகளில் நேற்று முதல் மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு இந்திய வானிலை மையம் டிசம்பர் 3 வரை ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.
மேலும் 3 நாட்களுக்கு இங்கு மழை நீடிக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் வலுவிழந்த நிலையிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழையை கொட்டித் தீர்த்தது.
தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்ததாக பெங்களூரில் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரில் 3.8 மிமீ மழை பதிவானது, HAL ஏர்போர்ட் மற்றும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் ஆகியவை முறையே 7 மிமீ மற்றும் 2.2 மிமீ மழை பதிவாகியுள்ளன.
இதனால் பெங்களூரில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை குறைந்து கடும் குளிர் நிலவி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரில் மேலும் 3 நாட்கள் மழை தொடரும் என்றும் ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
தவிர, தட்சிண கன்னடா, உடுப்பி, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், குடகு, மைசூரு, சாமராஜநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் IMD மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.