பியாங்பாக்
வடகொரியா எப்போதுமே ரஷ்யாவுக்கு ஆதரவு அளிக்கும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைய முயன்றதால் ரஷ்யா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.இந்நாடுகள் ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன.
ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது இவ்விரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3ம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன.
ரஷ்ய ராணுவ அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்து பேசினர்.\
கிம் ஜாங் உன் இந்த சந்திப்பின் போது,
“நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்”
எனக் கூறியுள்ளார்.