மும்பை

ரும்  5 ஆம் தேதி மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்கும்  என பாஜக அறிவித்துள்ளது.

அண்மையில் நடந்த மகராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றியை கண்டபோதிலும், ஒரு வாரத்துக்கு மேலாக ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்தக் கூட்டணியில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றதால் முதல்வர் பதவியை ஏற்க பாஜக விரும்புகிறது.  ஆனால் தேர்தலை முதல்வர் ஷிண்டேயின் முகத்தை முன்வைத்தே சந்தித்ததாகவும், இதனால் அவர் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று சிவசேனாவினர் விரும்பினர்.

இதனை எற்க பாஜக மறுத்து  பிறகு நடத்திய பேச்சுவார்த்தையில் முதல்வர் பதவியை பாஜகவுக்கு வழங்க தலைவர்கள் ஒப்புக்கொண்டதாக சொல்லப்படுகிறது  மேலும் முதல்வர் பதவியை தங்களுக்கு தராவிட்டால், உள்துறை, நிதி இலாகாக்கள் மற்றும் சபாநாயகர் பதவியை தங்களது கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தி உள்ளது.

இவற்றை தராவிட்டால் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்க சிவசேனா விரும்புவதாகவும் பாஜக தலைவர்களிடம் ஷிண்டே கூறியுள்ளார்.திடீரென ஷிண்டே மாநில தலைநகரை விட்டு சொந்த கிராமத்துக்கு சென்றதாக கூறப்பட்டது.

இந்த குழப்பங்களுக்கு இடையே நேற்று  புதிய அரசு பதவி ஏற்பு விழா வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் என்று பாஜக அறிவித்துள்ளது.