சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தையும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதைத்தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் சமாதிகளில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துபெற்றார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளையொட்டி சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நினை விடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வைரமுத்து, நடிகர் கமல் ஹாசன், அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள், கட்சியினர், கூட்டணி கட்சி தலைவர்கள், திரையுலகினர் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உதயநிதி, “உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் – அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம்.
எந்நாளும் வழிநடத்தும் தாய் – தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.