சென்னை: மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டுவர உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்..
“நீங்கள் வெற்றி பெற்றால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சேதப்படுத்தப்படுவதில்லை; நீங்கள் தோற்றால் அவை சேதப்படுத்தப்படு கின்றனவா” என எதிர்க்கட்கிகளை கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நாட்டில் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குச்சீட்டுகள் முறையை திரும்பப் பெற கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், வாக்குப்பதிவுகளில் தோல்வியுற்றால் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுகின்றன என்று எதிர்க்கட்சிகளை சாடியது.
நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்படுவதில்லை. நீங்கள் தேர்தலில் தோல்வியடையும் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதப்படுத்தப்படுகின்றன” என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிபி வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தது.
விசாரணையின்போது, மனுதாரர் கே.ஏ.பால், தாம் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும், அங்கெல்லாம் வாக்குப்பதிவு வாக்குசீட்டுக்கள் மூலமே நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும், வாக்குச் சீட்டு வாக்களிப்பை வெளிநாடுகள் ஏற்றுக்கொண்ட தாகவும், இந்தியாவும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றும் மனுதாரர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “உலகின் மற்ற பகுதிகளிலிருந்து நீங்கள் ஏன் வித்தியாசமாக இருக்க விரும்பவில்லை?” என்று என்று கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர் பால் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், இணை நிறுவனருமான எலோன் மஸ்க், EVM களில் முறைகேடு செய்யப்படலாம் என்று கூறியதாக கூறினார். ஆந்திரப் பிரதேச முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான என் சந்திரபாபு நாயுடு மற்றும் மாநில முன்னாள் முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்படலாம் என்று கூறியதாக சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, தேர்தல் முடிவுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பெறும் தோல்வியுற்ற வேட்பாளர்கள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு ஐந்து சதவீத EVM களில் பதிக்கப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலர் சிப்களை சரிபார்ப்பதற்கு பணம் கட்டி, எழுத்துப்பூர்வ கோரிக்கை அளித்தால், அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கும் என்று கூறியதுடன், வெற்றி பெற்றால் இவிஎம்-ஐ பாராட்டுவதும், தோல்வியுற்றார் இவிஎம்ஐ குறைசொல்வதும் வாடிக்கையாக உள்ளது என்று சாடிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.
இதற்கிடையில், இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில், தல்கடோரா ஸ்டேடியத்தில் நடந்த காங்கிரஸின் ‘சம்விதன் ரக்ஷக் அபியான்’ நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மீண்டும் வாக்குச் சீட்டு முறையிலான வாக்குப்பதிவு வேண்டும் என்றவர், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பாரத் ஜோடோ யாத்ரா அளவில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் கார்கே வலியுறுத்தினார்.
ஏற்கனவே இதுபோன்ற மனுக்கள், கடந்த ஏப்ரலில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்குச் சீட்டு முறைக்குத் திரும்பக் கோரும் ஒரு தொகுதி மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு குறித்த சந்தேகம் “ஆதாரமற்றது” என்று கூறியது. வாக்குப்பதிவு சாதனங்கள் “பாதுகாக்கப்பட்டவை” என்றும், வாக்குச்சாவடி கைப்பற்றுதல் மற்றும் போலி வாக்குப்பதிவு ஆகியவற்றை நீக்கியது என்றும் அது கூறியது குறிப்பிடத்தக்கது.