சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் ஃபெங்கல் புயல் காரணமாக மாநிலத்தின் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், விழுப்புரத்தில் நடைபெறுவதாக இருந்த முதலமைச்சரின் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக வரும் 28 மற்றும் 29 தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், விழுப்புரத்தில் நடக்க இருந்த கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில்  மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு  வரும் பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்து, அவ்வப்போது மாவட்டங்களுக்க நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கோவை, விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களில் ஆய்வு செய்த நிலையில், நவம்பர் 28, 29,-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்தது.

 இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வழுபெற்று சென்னை -நாகை இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 30ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 இதனை அடுத்து 28, 29,-ம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சி மற்றும் கள ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.