தெலுங்கானாவில் யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அதானி அறக்கட்டளை ₹100 கோடி நன்கொடை வழங்கியது.
இந்த ஆண்டு ஜனவரியில் டாவோஸில் நடந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாத்தில் நடந்த சந்திப்பின் போது இதற்கான காசோலையை வழங்கினார்.
“திறன் மேம்பாடு மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளிப்பதற்கான தெலுங்கானா மாநில அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக” அதானி அப்போது தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதானி அறக்கட்டளை வழங்கிய நிதியை ஏற்கப் போவதில்லை என்று தெலுங்கானா அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதானி அறக்கட்டளை தலைவரான டாக்டர் பிரித்தி அதானிக்கு தெலுங்கானா மாநிலத்தின் தொழில்துறை மேம்பாட்டுக்கான அரசு ஆணையர் சிறப்பு தலைமைச் செயலர் ஜெயேஷ் ரஞ்சன் எழுதியுள்ள கடிதத்தில் :
“18.10.2024 தேதியிட்ட கடிதத்தின் மூலம் உங்கள் அறக்கட்டளையின் சார்பாக யங் இந்தியா ஸ்கில்ஸ் பல்கலைக்கழகத்திற்கு ரூ. 100 கோடியை வழங்கியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
பல்கலைக் கழகம் நிதி பரிமாற்றம் செய்யாததால், இதுவரை நன்கொடையாளர்கள் எவரிடமும் நிதிப் பரிமாற்றத்தைக் கோரவில்லை.
பிரிவு 80G இன் கீழ் IT விலக்கு கிடைத்தது, இந்த விலக்கு உத்தரவு இப்போது வந்திருந்தாலும், தற்போதுள்ள சூழ்நிலைகள் மற்றும் சர்ச்சைகளை அடுத்து நிதி பரிமாற்றத்தை கோர வேண்டாம் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தலைமைச் செயலர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.